Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது: தமிழக அரசு

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:33 IST)
சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
 
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரிய வழக்கின்  விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். 
 
அவரது வாதத்தில் சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது  என்றும் குறிப்பாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை நேரலையாக ஒளிபரப்புவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், பட்ஜெட் உரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்றும் கூறிய வழக்கறிஞர் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஏன் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments