Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்விழா - தமிழக ஆளுநா் ஆா். என். ரவி பங்கேற்பு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்விழா - தமிழக ஆளுநா்  ஆா். என். ரவி பங்கேற்பு

J.Durai

கோயம்புத்தூர் , சனி, 9 மார்ச் 2024 (15:07 IST)
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள , கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா நடைபெற்றது..
 
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், கல்லூரி மேலாண்மைக் குழுவின் தலைவா் பொறியாளா் ஆா். சோமசுந்தரம்  வரவேற்புரையாற்றினார். 
 
மேதகு தமிழக ஆளுநா்  ஆா். என். ரவி  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய  அரங்கத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்
 
அப்போது பேசிய அவர்,உலகத்தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாகக் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியை முனைவா் மா. ஆறுச்சாமி இளைய தலைமுறைக்காக உருவாக்கியுள்ளார் என்றும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தக் கல்லூரி தனக்கான ஓா் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.
 
உழைப்பும் உள்ளார்ந்த அா்ப்பணிப்புமே இதன் வளா்ச்சிக்குக் காரணம் என்றும் கற்பித்தல் திறனிலும் ஆராய்ச்சி நுட்பத்திலும் சிறந்து விளங்கும் இக்கல்லூரி பொன்விழாவுடன் பவளவிழா, வைரவிழா ஆகியவற்றையும் கொண்டாட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
 
பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம் எனவும், இந்தக் கல்லூரியில் அதிக அளவில் மாணவிகள் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்..பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார்…
 
ஒரு காலத்தில் நம் நாட்டை உலகநாடுகள் அவ்வளவாகப் போற்றவில்லை என்றும் ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது, பாரதத்தின் கடவுச்சீட்டை இன்று உலகமே மதிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மிக விரைவில் பாரதம் உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடாக மாறவுள்ளது என்றும் நம் பண்பாட்டையும் பழமையையும் திறமையையும் பல நாடுகள் போற்றுகின்றன என்றும் கூறினார். அத்துடன் மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டார். இத்திட்டங்களால் மகளிர் தொழில்முனைவோர்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் துணைசெய்கின்றனா் என்று பாராட்டினார்.
 
இளைய தலைமுறையான மாணாக்கர்களின் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும் திட்டமிடுதலும் தேவை என்றும் புதிய பாரதத்தை உருவாக்குவதில் மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது” என்றும் வலியுறுத்தினார்.
 
விழாவின் நிறைவில் கல்லூரியின் பொருளாளா் மருத்துவா்  ஓ.என். பரமசிவன் நன்றியுரை வழங்கினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் தினத்தில் தான் தாய் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்ததாக புகழாரம் சூட்டிய- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்