தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை..!

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (07:33 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்ய இருப்பதாகவும் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
பாஜக ஆளாத மாநிலங்களில்  கவர்னர் மற்றும் முதல்வர் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
இந்த நிலையில் தமிழகத்திலும் கவர்னர் மற்றும் முதல்வர் இடையே அடிக்கடி மோதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட உள்ளது.  ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் தொடர் கூட இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்யவுள்ளார். 
 
அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் அவரிடம் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments