தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது ஆளுநருக்கு அடுக்கடுக்கான கேள்விகள் நீதிபதிகளால் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கனிமங்கள் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்துள்ளார்.