Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிராமிக கலைகளை ஊக்குவிக்கும் தமிழக அரசு - நாட்டுபுற கலைஞர் வேல்முருகன் !

Advertiesment
folk artist Velmurugan
, செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (12:24 IST)
கிராமிக கலைகளை  தமிழக அரசு ஊக்குவித்து வருகின்றது - கோவையில் நடைபெற்று வரும் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்பு நாட்டுபுற கலைஞர் வேல்முருகன் பேட்டி.
 
கோவை வ உ சி மைதானத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சியை தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில், நடிகர் சத்தியராஜ் கடந்த 7 ந்தேதி துவக்கி வைத்தார். அன்று முதல், தினமும் புகைப்பட கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். 
 
மேலும், மாலையில் தினமும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், இன்று நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன் அவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சியை பார்வையிட்டு வியந்தார். 
 
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" , தமிழகம்  மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும்  அத்தனை தமிழ்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.  
 
தந்தை பெரியார், பேரறிஞர்  அண்ணா, நம்முடைய தமிழக முதல்வர் தளபதி  அவர்கள் ஆளும் ஆட்சியில் மிகப்பெரிய வரலாறுகள், இருந்த  காலகட்டத்தில் இருந்து, ஒவ்வொரு விஷயமும் மிகப்பெரிய வரலாறாக இருந்து வருகின்றது.  அத்தனை வரலாறுகளும், இன்றைக்கு தமிழக முதல்வராக இருந்து தன்னை,   சாதாரண மனிதனாக ஆக்கி மக்களுக்கு எப்போதும் தொண்டனாக இருக்க வேண்டும், மக்களுடைய தொண்டனாக, இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். 
 
பல்வேறு திட்டங்கள் ஒரு சிறிய விஷயங்களை கூட அவர் விட்டதில்லை. 2  ஆண்டுகளில் கிட்டத்தட்ட எத்தனையோ திட்டங்கள், ஏழை எளிய மக்களுடைய விவசாய திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், மருத்துவ காப்பீடு திட்டங்கள், திருமண உதவித் திட்டம், பள்ளி கல்வி, மருத்துவ உதவி என  எத்தனையோ திட்டங்களை, கலைஞர் ஆட்சியில் எப்படி இருந்ததோ , அதேபோல முதல்வர் அவர்கள், தளபதி அவருடைய ஆட்சியில், வெகு சிறப்பாக உள்ளது. 
 
மக்கள் எப்பொழுதும் தமிழக முதல்வராக இவர்தான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.  அவருடைய ஆட்சி, ரொம்ப ரொம்ப வெற்றிவாகை சூடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால்,  தலைவர் கலைஞரின்  பாடல், கடைசி பாடலை பேசவும், மாநாட்டில் அவர் எழுதிய பாடலை வேல்முருகன் பாட வேண்டும் என்று எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். 
 
அந்த மேடையில், 23 நாட்டு தலைவர்கள் இருந்த மேடையில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் தலைவர் பாட வைத்தார்.  உள்ளபடியே மிகப்பெரிய சந்தோசம், ஒவ்வொரு காலகட்டங்களிலும் தளபதி பிறந்தநாள் ஆக இருந்தாலும் சரி, கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கட்சி பாடல்களாக இருந்தாலும் சரி, சமுதாய பாடல்கள் மற்ற பொதுநல பாடல்கள் பாடுவதற்கு ஒவ்வொரு முறையும் முதல்வர் வாய்ப்பு கொடுத்து மக்கள் கலைஞர்களையும் கிராமிய கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
 
அதுதான் சென்னை சங்கமம். மிகப்பெரிய வரலாறு கிடைத்தது ஒவ்வொரு நிகழ்வுகளையும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.கோவையில்  மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் அற்புதமான அரங்கத்தை அமைத்து தலைவருடைய சின்ன வயதில் இருந்து தற்போது வரை என்னென்ன திட்டங்கள் செயல்பாடுகள் என காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. தளபதி மிசா சிறையில் இருந்ததைப்போல்  சிறைச்சாலை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
அந்த சிறைவாசலை பார்த்து பெரியவர்கள் கண்ணீர் விட்டார்கள். சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அதனை பார்த்து நெகிழ்ந்தார் ் அதனை பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்தார். இந்த தருணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் . 
 
என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது கிராமிய கலைஞர்கள் கிராமத்திலே திருவிழாக்கள் பாடல்கள் அப்படி இல்லாமல் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் மாநில அளவில் வெளிநாடுகளில் சென்று தங்களுடைய நிகழ்ச்சிகளை நிறைவேற்றி வருகிறார்கள் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு ஊக்கத்தொகை அனைத்தும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். 40 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள கலைஞர்களாகவும் இருந்தாலும், அவர்களுக்கு பென்ஷன் வழங்கி வருகிறார் என கூறினார். 
 
இந்த நிகழ்வில், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மண்டல தலைவர்கள் மீனாலோகு, தனலட்சுமி, நிலைக்குழு தலைவர்கள், ஏர்போட் ராஜேந்திரன், பொறியாளர் அணி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கல் ஏன் ஏற்படுகிறது? விக்கலை நிறுத்த தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?