Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:28 IST)
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் பிரச்சினையை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்பதால் இந்த நோயாளிகளின் உயிரைக் காக்க வெளியிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
 
ஆனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் ஆலையைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் என தமிழக அரசு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
 
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாடு முழுவதிலும் உள்ள பிற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ள தமிழக அரசு ஆலையை நாங்களே திறக்கலாம் என்றாலும் கூட அந்த பகுதியில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கின்றது. மேலும், தூத்துகுடி மக்கள் இன்னும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக நம்பவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments