Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கர், தீரன் சின்னமலை பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்?

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (11:22 IST)
தமிழகத்தில் 144 தடை உத்தரவால் தலைவர்களின் பிறந்தநாள்  நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை. 
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 827 பேர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆக இருந்தது இந்த நிலையில் தற்போது அது 8356 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 242 ஆக இருந்த நிலையில் தற்போது 273 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி ஒரே நாளில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 716 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி மிக விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனால், தமிழகத்தில் ஏப்.14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளிலும், ஏப்.17 ஆம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்தநாளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments