Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா, பான் பொருட்களுக்கான தடை ரத்து உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய முடிவு !

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (20:12 IST)
குட்கா, பான் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் இதை எதிர்த்து  தமிழ் நாடு அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி தமிழ்நாட்டிற்கு கடத்தப்படும் புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்ததுடன், கடத்திய நபர்கள், விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில்  நடந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என கூறி குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,  குட்கா பான் மசாலா, போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்தஉணவுப் பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின்  உத்தரவை எதிர்த்து தமிழ் நாடு அரசு  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments