மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கோவையில் மட்டும் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..!

Mahendran
வெள்ளி, 19 டிசம்பர் 2025 (16:20 IST)
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 
 
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த அதிரடி மாற்றங்களுடன் கூடிய பட்டியல் வெளியாகியுள்ளது. இறந்த வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்தத் திருத்த பணிகளால் பல மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 
 
கோவை: சுமார் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  
 
சேலம்: 3.62 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
திருச்சி: 3.31 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்.
 
திண்டுக்கல்: 3.24 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
நாமக்கல்: 1.93 லட்சம் பேர் நீக்கம்.
 
தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த புதிய வரைவு பட்டியல் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசியலில் 1967 மற்றும் 1977-ல் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்களை விஜய் குறிப்பிடுவது ஏன்?

100 நாளில் 100 பிளான்.. விஜய் - செங்கோட்டையன் போட்ட அதிரடி திட்டம்..!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு குடும்பமே தற்கொலை.. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி காரணம்..!

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

அடுத்த கட்டுரையில்
Show comments