Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது - அதிமுக துணை பொது செயலாளர் கே .பி.முனுசாமி!

திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது - அதிமுக துணை  பொது செயலாளர் கே .பி.முனுசாமி!

J.Durai

, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:32 IST)
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்......
 
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்க பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள  தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். 
 
பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.  அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக ஆய்வு மேற்கொள்வதே இல்லை. கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. 
 
மது, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டனும் தலைவனாக முடியும். திமுக போன்ற கட்சிகளில் குடும்ப உறுப்பினர்கள் தான் தலைவராக முடியும். திமுக எப்படி தொண்டர்களின் கட்சி என்று கூற முடியும். திருமாவளவன்,  தலித் தலைவர் முதல்வராக முடியாது என்று சொல்வது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் பிரதமராக,  முதல்வராக வர முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் சாதி பார்த்து வரவில்லை என்று கூறினார்.
 
மேலும், பாஜக மாநில தலைவர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து வரம்பு மீறி பேசுகிறார். இது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார்.
 
இந்தியாவில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி என்பதை விட தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து துறைகளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான்  வளர்ச்சி அடைந்துள்ளது. 
 
இது குறித்து அவர் உண்மையை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் துரைமுருகன் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம்-கவிஞர்வைரமுத்துபேச்சு.