Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.. சீமான் அறிவிப்பு..!

Advertiesment
Seeman

Siva

, புதன், 26 பிப்ரவரி 2025 (15:18 IST)
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகள் குறைய வாய்ப்பிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மார்ச் ஐந்தாம் தேதி இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது, "ஏற்கனவே தொகுதி சீரமைப்பு குறித்த கருத்தை எதிர்த்து நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம். 2003 ஆம் ஆண்டிலேயே இதற்கு எதிராக அறிக்கை விட்டு பேசியிருக்கிறேன்.

எனவே தற்போது ஆளும் கட்சியின் கருத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி ஏமாந்த கூட்டம் என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்.. நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடியாது.. திருமாவளவன்