Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றமா? சோனியா காந்தி எச்சரிக்கை

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (16:30 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என இன்றைய காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், இன்று திமுக மகளிர் மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ்  கட்சியின் ஆலோசனைக் கூட்டமும்  சென்னையில் நடைபெற்றது.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படலாம் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments