Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

MK Stalin

Mahendran

, புதன், 20 நவம்பர் 2024 (17:01 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து மொத்தம் 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

 14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து IND-GJ-25-MM-3458 மற்றும் IND-GJ-25-MM-1582 என்ற பதிவெண்கள் கொண்ட இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றபோது 03-01-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும் பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்றம் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!