Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அமைச்சரவை இன்று மாற்றமா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய பதில்.!!

Advertiesment
MK Stalin

Senthil Velan

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (12:22 IST)
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கே தகவல் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
 
வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று மாலை பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இலாக்கா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என கூறப்பட்டது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியானது.

 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலினிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கே தகவல் இல்லை என்று முதல்வர் பதில் அளித்தார். இதன் மூலம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்ற வெளியான தகவல் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் மருத்துவர் கொலையாளிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்..!