பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கனவே சென்னையில் இருந்து நெல்லை நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறப்பு ரயில் குறித்த தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து நிலைக்கு கூடுதல் சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி இரவு 10 20 மணிக்கு கிளம்பும் என்றும் நெல்லைக்கு மறுநாள் காலை 9 மணிக்கு சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து ஜனவரி 18ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பி மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது