நாகர்கோவில் தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். செப். 18, 25 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ரயில் நிலையங்களில் நிற்கும். சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.