ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

Mahendran
புதன், 13 ஆகஸ்ட் 2025 (17:45 IST)
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன், சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
 
முன்னதாக, தூய்மை பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், போராட்டத்தை கைவிட மறுத்துவிட்ட பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
 
இந்தச் சூழ்நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை ரத்து செய்தல், ஊதிய உயர்வு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments