Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரணத் தொகையை ₹6000ல் இருந்து ₹12,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (12:55 IST)
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க  வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில் தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க  வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியதாவது:

விடியா திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, மிக்ஜாம் புயல் மழையால், சென்னை மாநகரம், புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எந்த  நிபந்தனையும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிராவணத் தொகை வழங்க வ வேண்டும்.

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப கூடுதலாக ரூ.25000 வழங்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதுகள் நீக்கப் பகுதி வாரியாக  சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து அவற்றை அரசு செலவில் பழுதி நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு வெள்ளத்தால்  ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து இழப்பீடுகளாக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments