தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
அதில், மாநில செயலாளராக சி.விஜயலட்சுமி, மாநில இணை செயலாளராக எஸ்.என் யாஸ்மின், மாநில பொருளாளராக சம்பத்குமார், மாநில துணை செயலாளர்களாக விஜய்அன்பன் கல்லணை, எம்.எல் பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.