Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை முதல்வராகிறார் டி.டி.வி.தினகரன்?

துணை முதல்வராகிறார் டி.டி.வி.தினகரன்?
, வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:52 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்ளூரு சிறையில் சரண அடைந்தார். முன்னதாக  கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்துள்ளார்.


 


கடந்த 2011-ஆம் ஆண்டு கட்சிக்கு துரோகம் இழைத்ததாக சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ், நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் அவரது உறவினர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும் வரை சேர்க்கவில்லை. ஆனால் தற்போது சசிகலா அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்துள்ளார். டி.டி.வி.தினகரன் மற்று டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக சசிகலா அறிவித்தார்.

இந்நிலையில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க உள்ளார். இது சசிகலா ஆதரவு உறுப்பினர்களுக்கு பெரிய வெற்றி என்றே கூறலாம். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி அமைக்க ஓ.பி.எஸ்-ஐ ஆளுநர் ஏன் அழைக்கவில்லை? - ஒரு அலசல்