Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:19 IST)
தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!
மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் தி நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (28-ந் தேதி) முதல் 27.09.2023 வரை போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. 
 
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம். தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம். 
 
அரங்கநாதன் சுரங்க பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம். 
 
அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments