Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிரியா மண்ணே சிரி; இணையத்தில் வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை

சிரியா மண்ணே சிரி; இணையத்தில் வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை
, சனி, 3 மார்ச் 2018 (15:41 IST)
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சிரியா சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் பெரும்பாலும் கொல்லப்பட்டு பச்சிளம் குழந்தைகள்தான். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
 
இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து கவிஞ்ர் வைரமுத்து சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குரல் வடிவிலும் யூ-டியூபில் பதிவிட்டுள்ளார்.

சிரியா மண்ணே சிரி - கவிதை
 
குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் சென்கிறது; 
மேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..
கருக்குழியில் வளர்த்த சிசுக்களை; பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள் 
தங்கள் கற்பை போல தாய் மார்கள்...!
சாந்தியும் சமாதானமும் நிலவகூரும் பிராத்தனை குரல்...நசுங்கி போகிறது 
குழந்தைகள் கதறும் கூட்டோசையில்...
மீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்!
ரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் பறந்த கழுகுகள்!
வீடுகள் கான்கீரிட் கல்லறைகளாவதும்...
வீதிகள் உடல்களின் குப்பைத்தொட்டிகளாவதும்...
சாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பறிமாறப்படுவதும்...
அதிராத குரல்களில் உடையாடபடுகின்றனர் ஐ.நா-வின் தேநீர் இடைவெளிகளில்!
எலும்புக்கூடுகளில் எது சன்னி எது ஷியா?
தோண்டிய தொட்டக்களில் எது அமெரிக்க; எது ரஷியா?
எரியும் நெருப்பில் எது சவூதி; எது கொரியா?
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.
கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை....!
வழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை....!
அழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.
சிரியா மண்ணே சிறி!
வழியும் குருதியே வழி!
ஒலியா போறே ஒழி!
ரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்கு கேட்ட சகுனம்...!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகாலயாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை! ஆட்சி அமைப்பது யார்?