Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை செய்வது ஸ்விக்கியில் – சாப்பிடுவது ரோட்டுக்கடைகளில்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (16:43 IST)
ஸ்விக்கியில் உணவுப்பொருட்களை கொண்டு சென்று கொடுக்கும் பணியாளர்கள்  சாலையோரக் கடைகளில் சாப்பிடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தற்போது ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபர் ஈட்ஸ் என பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் விரும்பும் ஹோட்டலகளில் உணவுகளை ஆர்டர் செய்தால் நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதியை அறிமுகப் படுத்தி உள்ளனர்.

பேச்சிலர்ஸ் மற்றும் கணவன் மனைவி என இரண்டு பேருமே வேலைக்கு செல்லும் குடும்பங்கள் போன்றவர்களிடம் இருந்து இந்த நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த நிறுவனங்களும் 50 சதவீதம் வரை ஆஃபர்கள் கொடுத்து பெருமளவில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஒரு பெரும் தொழிலாக ஆன்லைன் ஃபுட் டெலிவரி இருக்கும் என தொழில் முகவர்கள் கூறி வருகின்றனர்.

உணவுப் பொருட்களை உணவகங்களில் இருந்து பெற்று வாடிக்கையாளர்களிடம் சேர்க்கும் டெலிவரி பாய்ஸ்கள் இந்த நிறுவனங்களில் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களாகவோ அல்லது வேறு வேலைப் பார்த்தும் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலோ முழு நேரமாக அல்லது பகுதி நேரமாகவோ இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நல்ல லாபம் ஈட்டி வரும் இந்த நிறுவனங்கள் இந்த டெலிவரி பாய்ஸ்க்கு சம்பளம் மற்றும் சலுகைகள் சரியாகக் கொடுக்கிறதா என்பவை எதுவும் வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.

இப்படி ஊருக்கெல்லாம் பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து உணவுகளை வாங்கி சென்று கொடுக்கும் இவர்கள் எங்கே சாப்பிடுகிறார்கள் என்று நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா? இல்லைதானே..

அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு மிகப்பெரிய ஃபுட் டெலிவரி நிறுவனத்தின் டெலிவரி பாய்ஸ் சிலர் அவசர அவசரமாக சாலையோரக் கடைகளில் சாப்பிடும் புகைப்படஙகளைப் பார்த்து ஊருக்கெல்லாம் ஆஃபரில் உணவு கொடுக்கும் இந்த நிறுவனக்கள் தங்களிடம் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாதா என  நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments