மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா: அதிமுக தலைமை அலுவலக தரையை தொட்டு வணங்கிய ஓபிஎஸ்!
மாலை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா: அதிமுக தலைமை அலுவலக தரையை தொட்டு வணங்கிய ஓபிஎஸ்!
அதிமுக இரு அணிகள் இன்னும் சற்று நேரத்தில் இணைய உள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.
தொண்டர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். 6 மாதங்களுக்கு பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த ஓபிஎஸ் தொண்டர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைத்தார்.
பின்னர் தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ் தரையை தொட்டு வணங்கினார். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இரு அணிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அணிகள் இணைப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர். இந்த அறிவிப்புக்கு பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவையில் ஓபிஎஸுக்கு துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.