Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி படுகொலை முதல் ராம்குமார் மரணம் வரை!

சுவாதி படுகொலை முதல் ராம்குமார் மரணம் வரை!

சுவாதி படுகொலை முதல் ராம்குமார் மரணம் வரை!
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:32 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


 
 
இந்த ஒரு சம்பவங்களும் கடந்து வந்த பாதை:-
 
* கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் அரிவாளால் வாய் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* சுவாதி படுகொலை நடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் ஜூலை 1-ஆம் தேதி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ராம்குமாரை கைது செய்த போது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறப்பட்டது. இவர் தான் சுவாதியை கொன்றார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு ஜூலை 2-ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* ஜூலை 4-ஆம் தேதி ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
மேலும் விபரங்களுக்கு:- 
 
 
* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமார் ஜூலை 5-ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
* புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை அவரது வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் ஜூலை 9-ஆம் தேதி முதல்முறையாக சந்தித்து பேசினார்.
 
மேலும் விபரங்களுக்கு:- 
 
 
* சுவாதி வழக்கில் குற்றவாளியை அடையாளம் காட்ட புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு ஜூலை 12-ஆம் தேதி நடத்தப்பட்டது.
 
மேலும் விபரங்களுக்கு:- 
 
 
* ஜூலை 13 முதல் 15-ஆம் தேதி வரை ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்தனர்.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* புழல் சிறையில் இருந்த ராம்குமாரிடம் நீதிபதிகள் ஜூலை 18-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு ஜூலை 30-ஆம் தேதி ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.
 
மேலும் விபரங்களுக்கு:- 
 
 
* ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராம்குமார் மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
 
மேலும் விபரங்களுக்கு:-
 
 
* செப்டம்பர் 16-ஆம் தேதி புழல் சிறையில் ராம்குமாரின் வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ் ராம்குமரை சந்தித்து பேசினார்.
 
* செப்டம்பர் 18-ஆம் தேதி மாலை 4:45 மணிக்கு ராம்குமார் புழல் சிறையில் மின் கம்பியை வாயிலும், உடம்பிலும் திணித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும் விபரங்களுக்கு:-
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் அறிவுரையை கேட்க வரவில்லை: ரங்கராஜ் பாண்டேவுக்கு சுபவீ சாட்டையடி கடிதம்