Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியின் ரத்தமும் ராம்குமாரின் சட்டையில் உள்ள ரத்தமும் வேறு வேறு: போலீஸ் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (08:23 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளிவந்தவாறு உள்ளது.


 
 
சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நுங்கம்பாக்கம் போலீசார் ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, கொலை செய்த விதத்தை நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
 
பின்னர் மேன்சனில் இருந்து கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையையும், சுவாதியின் ரத்த மாதிரியையும் காவல்துறை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருந்தது.
 
இந்நிலையில் சட்டையில் இருந்த ரத்தமும், சுவாதியின் ரத்தமும் ஒன்றாக இருந்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் ராம்குமார் தான் இந்த கொலையை செய்தான் என்பது உறுதியான நிலையில் இதில் புதிய திருப்பமாக இரண்டும் ஒரே ரத்தம் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
 
ராம்குமார் சட்டையிலிருந்த ரத்தக்கறையும், சுவாதியின் ரத்த மாதிரியும் ஒரே மாதிரி இருந்ததாக வெளியான தகவல் தவறு என சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ரத்த பரிசோதனையை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் முடிவுகள் தெரியும் என கூறப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments