Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்ப்பு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (06:14 IST)
இன்று தொடங்கவுள்ள தமிழக அமைச்சரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
 

 
கடந்த மே மாதம் 16ஆம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. புதிய சட்டசபையின் முதல் கூட்டம், ஜூன் 16ம் தேதி நடைபெற்றது.
 
இந்நிலையில், தமிழக சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
 
தமிழக அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். வரி மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டதும் அன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
 
இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும்? துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட வேண்டும்? உள்பட பல்வேறு அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments