நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த அந்த மர்மநபரை காவல் துறை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
நேற்று முன்தினம் சென்னை திருவான்மியூர் அருகே சுவாதியை கொலை செய்தவனை காவல் துறை கைது செய்ததாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி வதந்தி என காவல் துறை மறுத்தது.
இந்நிலையில் சுவாதி கொலையாளி திருவான்மியூர் அருகே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளன் என பரவிய அந்த செய்தி உண்மை தான் என தகவல்கள் வருகின்றன.
அந்த கொலையாளியை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறை விசாரித்து வருவதாகவும் பேசப்படுகிறது. விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் கொலையாளி குறித்த தகவல் வெளியிட முடியாது என காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாக தகவல்கள் கசிகின்றன.
இந்த கைது சம்பவத்தை திசை திருப்பவதற்காகவே தனிப்படை பெங்களூரூ, மைசூர் போன்ற பகுதிகளில் விசாரணை நடத்திவருவதாக காவல் துறை கூறிவருவதாக பேசப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் முழு விசாரணை நடத்தி, கொலைக்காண பின்னணி குறித்த அனைத்த தகவல்களும் கிடைத்த பின்னர் காவல் துறை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.