Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை; கத்தியுடன் கொலையாளி தப்பி ஓடும் 17 நிமிட வீடியோ; புதிய ஆதாரம்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (08:48 IST)
சுவாதி கொலை வழக்கில், அவரை கொன்ற பின், கொலையாளி கையில் கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடும் 17 நிமிட வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது.


 

 
சுவாதி கொலை வழக்கில் போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்திருப்பது வீடியோ காட்சிகள் மட்டுமே. தற்போது கொலையாளி பற்றிய சில வீடியோக்கள் கிடைத்துள்ளது. அதாவது கொலையாளி, கடந்த 24ஆம் தேதி காலை 6.32 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்துள்ளான். சரியாக 6.32 மணிக்கு அவன் ரயில் நிலையத்தில் நுழைந்துள்ளான். அந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
அதன்பின், அவன் சுவாதியை கொலை செய்துவிட்டு, 2வது தண்டவாளத்தில் இருந்து குதித்து, தண்டவாளம் வழியாக ஓடி, முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி வேகமாக ஓடும் காட்சிகள் கிடைத்துள்ளது.
 
அவன் இடது கையில் கத்தியுடன் வேகமாக ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது அவனுக்கு எதிர் திசையில் நடந்து வரும் வாலிபர் ஒருவர், அவனை அதிர்ச்சியுடம் மிரண்டு போய் பார்க்கிறார். அதன்பின் மூன்று முறை அந்த வாலிபர், கொலையாளியை திரும்பி பார்க்கும் காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
 
கொலையாளியை நேரில் பார்த்த அந்த வாலிபர் யார் என்பது பற்றியும் விசாரனை நடத்துப்பட்டு வருவதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments