Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் செய்தியாளர்களை இழிவு படுத்திய எஸ்.வி.சேகர் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பெண் செய்தியாளர்களை இழிவு படுத்திய எஸ்.வி.சேகர் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:52 IST)
பெண் செய்தியாளர்களை கொச்சை படுத்தும் விதமாக எஸ்.வி.சேகர் முகநூலில் வெளியிட்ட பதிவு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது.
 
அந்நிலையில், வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார். கனிமொழி எம்.பி.யும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், எஸ்.வி.சேகர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு