Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள்: எஸ்.வி.சேகர்

Webdunia
திங்கள், 14 மே 2018 (12:25 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே கருதப்பட்டது.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் பேட்டியளித்த எஸ்.வி,சேகர் தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், சென்னையில் தான் இருப்பதாகவும் தமிழக காவல்துறை துணிவிருந்தால் தன்னை கைது செய்து பார்க்கப்படும் என்றும் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்று எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments