எஸ்.வி சேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் - அதிர்ச்சியில் எஸ்.வி சேகர்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (09:08 IST)
பெண் பத்திரிக்கையாளரை கீழ்த்தரமாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது.
 
வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார். கனிமொழி எம்.பி.யும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய புகாரில் எஸ்விசேகர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments