Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீட்டா கூறுவது வேடிக்கையாக உள்ளது: சிங்கமாய் பாய்ந்த சூர்யா

Advertiesment
பீட்டா கூறுவது வேடிக்கையாக உள்ளது: சிங்கமாய் பாய்ந்த சூர்யா
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:53 IST)
ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்ற என்று பீட்டா கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதராகவாக அலங்காநல்லூரில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து சேலம் மற்றும் சென்னை மெரீனா ஆகிய பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர்.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வருபவர்களின் உணர்வோடு நானும் கைக்கோர்க்கிறேன் என்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதும் உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எதிரானது என்று பொய் பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிரது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணைப்போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்ரு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரலையின் போது மாயமான பெண்: அதிர்ச்சி வீடியோ!