இந்தியாவில் உள்பட உலகில் உள்ள 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படி உள்ளன? வகுப்பறைகளில் என்னென்ன வசதிகள் உள்ளன? வகுப்பறையில் உள்ள மாணவர்களின் மனோபாவம் எப்படி உள்ளது? என்பதை ஆய்வு செய்து உருவாக்கிய நூலை சூர்யாவின் அகரம் வெளியிட்டுள்ளது.
இந்த நூல் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
'வகுப்பறை உலகம்'
யாதும் இதழில் 'வகுப்பறை உலகம்' தொடராக வெளிவந்து தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அகரத்தின் வெளியீடாக வரும் இந்த நூல் கல்வியின் அடிப்படையையும் பிற நாடுகளின் கல்வியமைப்பையும் புரிந்து கொள்ள உதவும்.
உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஆவணம். இந்த நூலை எழுதியுள்ள விஜயபாஸ்கர் விஜய் அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கல்வியின் வாயிலாகச் சமூக மாற்றத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு.