சூர்யாதேவிக்கு கொரோனா பாசிட்டிவ்: விசாரணை செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனாவா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:38 IST)
சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்த வனிதா குறித்து பல திரையுலகினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் சூர்யாதேவி என்ற பெண் யூடியூபில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து சூர்யாதேவி மீது வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் 
 
அதன்பின் நீதிமன்றத்தில் சூர்யாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வனிதா- சூர்யாதேவி விவகாரம் சற்று அடங்கி உள்ள நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா என்று வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
சூர்யா தேவியை மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி என்பவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சூர்யாதேவி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெண் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சூர்யா தேவி மற்றும் வனிதா விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலால் மீண்டும் ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments