Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் ஆட்சி கலையும், ஸ்டாலின் முதல்வராவார்: கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சி கலையும், ஸ்டாலின் முதல்வராவார்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Advertiesment
தமிழகத்தில் ஆட்சி கலையும், ஸ்டாலின் முதல்வராவார்: கருத்துக்கணிப்பில் தகவல்!
, சனி, 9 செப்டம்பர் 2017 (16:08 IST)
தமிழகத்தில் தற்போது உள்ள சூழல் குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.


 
 
சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அதன்படி 5874 பேரிடம் தற்போது உள்ள அரசியல் சூழல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர் அவர்கள்.
 
அதில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வர வாய்ப்பு இருப்பதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தும்(21%), மூன்றாம் இடத்தில் கமல்ஹாசனும்(13%), நான்காம் இடத்தில் தினகரனும்(10%) உள்ளனர்.
 
மேலும் இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக 58.8 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் 30.2 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
 
சட்டசபை தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சியை பிடிக்கும் என 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 15.4 சதவீதம் பேர் அதிமுக எனவும், 10.7 சதவீதம் பேர் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் 4 திருமணம், இன்னும் பல: தாய்லாந்த் பெண்ணின் பலே திட்டம்!!