Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி சும்மா சும்மா கேஸ் போடக் கூடாது! – கேரளாவை கண்டித்த உச்சநீதிமன்றம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (16:25 IST)
முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து மனு அளிக்கும் கேரளா அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நீண்ட காலமாக கேரளா – தமிழகம் இடையே உடன்படாத தன்மை நீடித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரளா தொடர்ந்த வழக்கில் அணையை ஆய்வு செய்த குழு அணை பாதுகாப்பானதாக உள்ளதாக சான்று அளித்தது.

எனினும் தொடர்ந்து அணையில் நீர் திறப்பு விவகாரங்கள் குறித்து கேரள அரசு அடிக்கடி உச்சநீதிமன்றத்தை நாடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவ்வாறாக மனு அளிக்கப்பட்டது குறித்து கண்டித்த உச்சநீதிமன்றம் ”முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனு அளிக்கக்கூடாது. எப்போது தண்ணீரை திறக்க வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. புகார்கள் தெரிவிப்பதாக இருந்தால் கண்காணிப்பு குழுவிடன் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments