Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் முதல்முறையாக இருபாலினருக்கும் ஒரே சீருடை!

Advertiesment
கேரளாவில் முதல்முறையாக இருபாலினருக்கும் ஒரே சீருடை!
, புதன், 15 டிசம்பர் 2021 (13:47 IST)
கேரளாவில் முதல்முறையாக இருபாலினருக்கும் ஒரே சீருடை!
கேரளாவில் முதல் முறையாக பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகிய இரு பாலினர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் பாலின பாகுபாட்டை நீக்கும் வகையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. இந்த சீருடையை அணிந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்ற காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலின பாகுபாடு அற்ற சீருடை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் திடீர் மாயம்: ஐதராபாத்தில் பரபரப்பு!