Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி! தீர்ப்பு தள்ளி வைப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (16:56 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை  செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் உள்ளது.

 இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது.

இதனையடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதில், உச்ச நீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு வாதத்தில் ஈடுபட்டது. அதி, மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பிற்கும் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டுமே முடிவெடுக்கலாம்,. பேரறிவாளன் வழக்கு மத்திய புலனாய்பு அமைப்பில் கீழ் வருகிறது என வாதித்தது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் வழக்கில் 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை.ஆளுநர் எந்த விதிகளின் அடிப்படையில் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளு நர் செயல்பட்டிருப்பது உச்ச தீர்ப்பிற்கு முரணானது எனவும் தெரிவித்தனர்.

இந்த வாதம் குறித்து தமிழக அரசு,  ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்ச தீர்ப்பிற்கு முரணானது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட முதன்மையான அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது,  தமிழகத்தில் ராஜிவ் காந்தி படுகொலை நடைபெற்றதால் தமிழக அரசுதான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபடிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதியைக்  குறிப்பிடாமல்    ஒத்திவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக தலைமையை ஏற்று கொண்டால் விஜய் கட்சியுடன் கூட்டணி: ஜெயக்குமார்

சபரிமலை யாத்திரை சென்ற பக்தர் திடீர் உயிரிழப்பு! - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த தேவசம்போர்டு!

போர்களால் உணவே கிடைக்காத சூழல் ஏற்படப்போகிறது! - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..!

நீண்ட நேர செல்பியால் ஆத்திரமானதா திருச்செந்தூர் யானை.? 2 பேர் பலியான சம்பவத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments