Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர்..!

Advertiesment
Stalin Letter

Mahendran

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (15:05 IST)
அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது!

முறையாகக் குழு அமைத்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீடு தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.

இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை.! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!