முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வெளிமாநிலம் செல்ல அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதுமட்டுமின்றி அவருக்கு இடைக்கால ஜாமின் மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.
இந்த நிலையில் இடைக்கால ஜாமீனில் இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் தற்போது நிரந்தர ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்ப்பித்துள்ளது.
முன்னதாக ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.