எஸ்விஎஸ் குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவ்ய் பிறப்பித்துள்ளது.
எஸ்விஎஸ் குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.