Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் ஆட்சி கலையும் அபாயம்: குவியும் புகார்கள்!

தமிழகத்தில் ஆட்சி கலையும் அபாயம்: குவியும் புகார்கள்!

தமிழகத்தில் ஆட்சி கலையும் அபாயம்: குவியும் புகார்கள்!
, திங்கள், 20 பிப்ரவரி 2017 (09:47 IST)
புதிதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவியேற்றாலும் தமிழக மக்களிடையே இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கலையும் என்ற மனப்பான்மையே உள்ளது. இதற்காக ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைகள் பறக்கின்றன.


 
 
கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபை விதிகள் மீறப்பட்டுள்ளதாக பலரும் புகார்கள் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சி திமுக ஆளுநரையே சந்தித்து முறையிட்டுள்ளது.
 
எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தது. சட்டசபை விதிகளுக்கு எதிரானது. மேலும் இரண்டு முறை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மூன்றாவது முறையாக கூடியது, இவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இரண்டு முறை முன் மொழிந்ததும் சர்ச்சையாகியுள்ளது.
 
ஒரே தீர்மானத்தை இரண்டு முறை முன்மொழிய முடியாது. 6 மாதம் கழித்து தான் ஒரே தீர்மானத்தை இரண்டாவது முறை முன்மொழிய முடியும் இதனால் முதல் தீர்மாணம் தோல்வியடைந்து விட்டது என்பதே அர்த்தம். இதனையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இப்படி தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபை விதிகள் பின்பற்றப்படவில்லை என ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் புகார்கள் குவிந்து வருகிறது. நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் [email protected] என்ற ஆளுநர் அலுவலக மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பலரும் ஆட்சியை கலைக்க கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சட்டசபையில் நடந்தவை குறித்து சட்டசபை செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆட்சி தொடருமா, அல்லது கலைக்கப்படுமா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர ஓபிஎஸ்-இன் அடுத்த திட்டம்!