Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது : கை கோர்க்கும் நெட்டிசன்கள்

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது :  கை கோர்க்கும் நெட்டிசன்கள்
, திங்கள், 18 ஜூலை 2016 (17:46 IST)
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ். இவர் சேலம் மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். 


 

 
சில நாட்களுக்கு முன்பு, பேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தை சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில், சரியான நடவடிக்கை எடுக்காமல் போனதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் மன்னிப்பு கேட்டார். 
 
இதற்கு பின்னால் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் இருந்தார் என்று, அவர்தான் போலீசாரை மன்னிப்பு கேட்க வைத்தார் என்றும் அப்போது ஒரு செய்தி வெளியானது.
 
இந்நிலையில்,  சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு  இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி மனுஷ் கடந்த 8ஆம் தேதி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அவருக்கு ஜாமினும் மறுக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் சிறையில் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரைக் கட்டிப் போட்டு 30 சிறைக் காவலர்கள் அவரை தாக்கினர் என்றும் அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்தார்.
 
இதனால், பியூஷ் மனுஷிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். #stand_with_piyush என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் ஆதரவு கேட்டுள்ளனர். ஏராளமானோர் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குத்துன்னா சும்மா இப்டிதான் குத்தனும்; அழகிகளுடன் ஆட்டம் போட்ட எம்.எல்.ஏ : வீடியோ