Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் உடல்நிலை நிலவரம்.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

செரிமான பிரச்சனை காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ய இருப்பதாகவும், ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனை செய்யவும் மருத்துவ குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிய பரிசோதனைக்கு பின்னர் அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக முக்கிய பரிசோதனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments