Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் என்னய்யா விஜய்... 25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

விஜய் என்னய்யா விஜய்... 25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி
, சனி, 10 நவம்பர் 2018 (13:43 IST)
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் வெளியான படம் வள்ளி. இந்த படத்தில் அவர் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் ஒரு காட்சி பின்வருமாறு, 
 
ஒரு இடத்தில் இலவசமாக வேட்டி சேலை கொடுத்து கொண்டிருப்பார்கள். மக்கள் வரிசையில் நின்று அதனை வாங்கி கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வரும் ரஜினி, ஏய்யா, ஏம்மா நாம என்ன பிச்சைக்காரங்களா? சேலை, வேட்டி வாங்கறதுக்கு? வேலை கேளுங்கய்யா, வேலைவெட்டி கிடைத்தால் சேலை வேட்டி நாமே வாங்கலாம். அவங்களை மாத்த முடியாது. செத்தாலும் மாற்ற முடியாது, நாம மாறலாம். என்று கூறுவார்.
 
அதன் பின்னர் பொதுமக்கள் சேலை, வேட்டிகளை தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவார்கள். படம் வெளியான அந்த காலத்தில் தமிழக முதலமைச்சராக இருந்தது ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே ரஜினிக்கு ஆளும் கட்சியுடன் சில உரசல்கள் இருந்ததால் இது போன்ற நாசுக்கான வசனங்கள் அவரது படத்தில் எட்டிப்பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீ சீ... ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையா இது? மாணவியை மடிமேல் உட்கார வைத்து...