விஜய் டிவியின் 2022 ஆம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் இன்று முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர் மற்றும் சீனியர் சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தி வருகிறது.
இதில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் 8ஆரம்பித்த நிலையில், இதன் இறுதிப் போட்டி ஜூன் 27 ஆம் தேதி நடந்தது.
இதில், ரிஹானா இரண்டாம் இடமும், நேஹா 3 ஆம் இடமும், கிரிஸ்ஸாங்க் 3 ஆம் இடமும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் தன் குடும்பத்தினருடன் இன்று முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.