152 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தொடங்கியது.
152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் புளூ மூன் என்ற அழைக்கப்படுகிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இன்று சிறப்பு. முழு சந்திர கிரகணம் இரவு 7.25 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வு இந்தியா முழுவதும் தெரியும்.
தொலைநோக்கி மற்றும் கண்ணாடி அணியாமல் சாதரணமாக கண்களாலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அபூர்வ சந்திர கிரணம் ஆரம்பமானது சென்னையில் தெரிய தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.