Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு தீபாவளி: சனியும் திங்களும் விடுமுறையா?

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (19:59 IST)
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிறு அன்று வருவதால் தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர் செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26ஆம் தேதி சனி மற்றும் அக்டோபர் 28ஆம் தேதியான திங்கள் ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது

இந்த சற்றுமுன்னர் அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதே நேரத்தில் தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்றும் ஒருவேளை விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளும் பள்ளிகள் அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் இதனை பயன்படுத்தி திங்கள் விடுமுறை தினமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments