Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கிவிட்டது கோடை வெயில்.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..!

Siva
புதன், 5 மார்ச் 2025 (13:59 IST)
கோடை வெயில் தற்போது தொடங்கிவிட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் தண்ணீர் பந்தல் அமைக்க திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
முதல்வரும், திமுக தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, மார்ச் மாத தொடக்கத்திலேயே  வெப்பம் அதிகரித்துள்ள நிலையில்  தமிழக மக்களை இந்த கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திமுக சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் - மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் - சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும். 
 
அவ்வாறு திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருள்களை மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.
 
மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இந்த தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments